அமெரிக்காவில் வசிக்கும் பெண் ஒருவர், இந்தியா மற்றும் அமெரிக்காவில் புற்றுநோய் மருந்துகளின் விலையை ஒப்பிட்டுப் பதிவிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் ‘ரெவ்லிமிட்’ என்ற புற்றுநோய் மருந்து ஒரு மாத்திரையின் விலை சுமார் 85,000 ரூபாய் ($900) ஆக இருப்பதாகவும், அதே மருந்து இந்தியாவில் வெறும் 35 முதல் 300 ரூபாய் வரை மட்டுமே கிடைப்பதாகவும் அந்தப் பெண் தனது வீடியோவில் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் மருந்து நிறுவனங்கள் கொள்ளையடிப்பதாகவும், இந்தியா தனது மக்களுக்கு மலிவான விலையில் மருத்துவ வசதிகளை வழங்குவதாகவும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, சுமார் 9 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. அமெரிக்காவில் மருத்துவச் செலவுகள் மற்றும் மருந்துகளின் விலை கட்டுக்கடங்காமல் இருப்பதை இது மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Liz & Shiv (@spicygori)

“>

ஏற்கனவே, அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு பெண், அங்கு 1,000 டாலருக்கு விற்கப்பட்ட மருந்தை, அதே மருந்து நிறுவனத்தின் இந்தியத் தயாரிப்பு மூலம் வெறும் 25 டாலருக்கு வாங்கி, அமெரிக்க மருத்துவ முறையை ஒரு “மோசடி” என்று விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய மருத்துவத் துறையின் இந்த மலிவான விலைக் கொள்கை உலக நாடுகளிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.