ரயில் நிலையம் ஒன்றில் ஏற்கனவே பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்த ஒரு கம்பார்ட்மென்ட்டில், பயணி ஒருவர் உள்ளே நுழைய முயன்றதால் ரயிலின் தானியங்கி கதவை மூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அவர் ஒரு அடி பின்வாங்கி கீழே இறங்கினால் மட்டுமே கதவை மூட முடியும் என்ற சூழல் இருந்தும், அவர் எதற்கும் பணியாமல் உள்ளேயே இருக்க அடம் பிடித்துள்ளார்.
நிலைமையைக் கட்டுப்படுத்த வந்த ரயில்வே அதிகாரிகள், அவரை உள்ளே தள்ளி கதவை மூடப் பலவாறு முயற்சி செய்தும் அது தோல்வியில் முடிந்தது. தன்னால் தான் மொத்த ரயிலும் தாமதமாகிறது, சக பயணிகள் காத்துக்கிடக்கிறார்கள் என்று தெரிந்தும், அவர் கீழே இறங்க முற்றிலும் மறுத்து பிடிவாதம் காட்டியுள்ளார்.
What kind of compulsion makes someone squeeze into an already packed train compartment despite the pain? pic.twitter.com/jdY66L667C
— Ghar Ke Kalesh (@gharkekalesh) July 2, 2026
“>
அதிகாரிகளுக்கும் அந்தப் பயணிக்கும் இடையே நடந்த இந்த முரட்டுத்தனமான ஈகோ சண்டையின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பி வைரலாகி வருகிறது.
