உலகின் பல்வேறு நாடுகளில் ஒயின் தயாரிக்கப்பட்டாலும், ஸ்பானிஷ் ஒயின்களுக்கு என்றுமே சர்வதேச சந்தையில் தனி மகுடம் உண்டு. இந்நிலையில், ஒயின் தயாரிப்பில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் ஸ்பெயின் நாட்டில் தற்போது ஒரு விநோதமான மற்றும் ஆச்சரியமளிக்கும் ட்ரெண்ட் பரவி வருகிறது. அங்குள்ள முன்னணி நிறுவனங்கள் தங்களது லட்சக்கணக்கிலான மதிப்புள்ள விலை உயர்ந்த ஒயின் பாட்டில்களை கடலுக்கு அடியில் வீசி விடுகின்றனர்.

பல ஆண்டுகள் கடலடி நீரில் மூழ்கி இருக்கும் இந்த பாட்டில்கள், பின்னர் வெளியில் எடுக்கப்பட்டு உலக சந்தையில் பல கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டு வருகின்றன. இதற்கென ஒயின் பாட்டில்கள் பலத்த பாதுகாப்பு பெட்டகங்களில் அடைக்கப்பட்டு, கடலின் ஆழமான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு மூழ்கடிக்கப்படுகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by Abhinash (@epic9explain)

கடலுக்கு அடியில் நிலவும் முழுமையான இருட்டு, அதிகப்படியான நீரின் அழுத்தம் மற்றும் கடல் அலையின் தொடர்ச்சியான அசைவுகள் ஆகியவை ஒயினின் சுவையை பல மடங்கு கூட்டுவதாக நிறுவனங்கள் நம்புகின்றன. சூரிய ஒளி படாத இருண்ட ஆழத்தில் ஒயின் நீண்ட காலம் இருப்பதால் அதன் டெக்ஸ்சர் மிகவும் மென்மையாகவும், பணக்கார சுவையுடனும் மாறுவதாகக் கூறப்படுகிறது.

மேலும், கடல் உப்பு மற்றும் அழுத்தம் இந்த ஒயினுக்கு ஒரு தனித்துவமான ஃபிளேவரைத் தருகிறது. சில ஆண்டுகளுக்குப் பிறகு கடலில் இருந்து மீட்டெடுக்கப்படும் இந்த பாட்டில்களில் “சீ ஏஜ்டு” (Sea Aged) அல்லது “அண்டர்வாட்டர் மெச்சூர்ட்” (Underwater Matured) என்ற பிரத்யேக சான்றிதழ் ஒட்டப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.

இருப்பினும், இது வெறும் மார்க்கெட்டிங் தந்திரம் மட்டுமே என்று சில ஒயின் நிபுணர்கள் வாதிடுகின்றனர். இந்தியாவில் தற்போது ஒயின் கலாச்சாரம் அதிகரித்து வரும் வேளையில், ஸ்பெயினின் இந்த கடல் ஒயின் முறை இந்திய முதலீட்டாளர்களிடையே பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்தியாவின் கடல் காலநிலை முற்றிலும் மாறுபட்டது என்பதால், இந்த சோதனையை இந்தியக் கடற்பரப்பில் எளிதாகச் செய்ய முடியாது என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.