டெல்லியைச் சேர்ந்த அனுக்ருதி வித்யார்த்தி என்ற பெண், தான் பணியாற்றி வந்த நிறுவனத்திலிருந்து திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டதை இன்ஸ்டாகிராமில் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.
கடந்த ஐந்தரை ஆண்டுகளாக அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், தனது பணிப்பொறுப்பு ‘தேவையற்றது’ என்று கூறி நிர்வாகம் தன்னை வேலையை விட்டு நீக்கியதாக அவர் கண்ணீருடன் தெரிவித்தார். பூஜ்ஜியத்திலிருந்து மீண்டும் வாழ்க்கையைத் தொடங்க வேண்டிய சூழல் தனக்கு ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்தகட்டமாக என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், இந்த இழப்பு கடவுள் தனக்குக் காட்டிய ஒரு வழிகாட்டுதல் என்று நேர்மறையாகச் சிந்திப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாதாந்திர சம்பளம் வருவது நின்றுவிடும் என்ற கவலையை வெளிப்படுத்தினாலும், இதை ஒரு புதிய தொடக்கமாகப் பார்க்க முயற்சிப்பதாக அனுக்ருதி கூறியுள்ளார்.
இவருடைய பதிவை சமூக வலைதளங்களில் பார்த்த பலரும், தாங்களும் இதேபோன்ற பணிநீக்க அனுபவங்களைச் சந்தித்ததாகக் கூறி அவருக்கு ஆதரவாகக் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
View this post on Instagram
“>
“எதுவும் நிரந்தரம் இல்லை, இதுவும் கடந்து போகும்” என்றும், “தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்த்துவிட்டு புதிய வேலைவாய்ப்புகளைத் தேடுங்கள்” என்றும் பல பயனர்கள் அவருக்கு ஊக்கமளித்து வருகின்றனர்.
இந்த வீடியோ இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து, பணிநீக்கம் குறித்த பரவலான விவாதத்தை உருவாக்கியுள்ளது.
