மத்திய பிரதேச மாநிலம் ஒரு கிராமத்தில், உயிரிழந்த பசு ஒன்றின் உடலை குப்பை அள்ளும் வாகனத்தில் கட்டி சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்குச் சாலை வழியே கொடூரமாக இழுத்துச் சென்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “இறப்பிற்குப் பின்னும் மனிதநேயமும் கண்ணியமும் இல்லையா?” என்று ஒட்டுமொத்த சமூகத்தையும் கேள்வி கேட்க வைத்துள்ள இந்த அவலத்தின் வீடியோ காட்சிகள், தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. புனிதமாகக் கருதப்படும் பசுவிற்கு நேர்ந்த இந்த அவமரியாதையைக் கண்டு ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், இதற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
A dead cow was tied with a rope to a Gram Panchayat garbage vehicle and dragged for nearly 1 kilometre on the road in Jhallar village, Bhainsdehi Assembly constituency, instead of being transported with dignity for its last rites. The horrifying act came to light after local gau… pic.twitter.com/ixliM63osX
— yash saghal (@YSaghal) June 29, 2026
உயிரிழந்த விலங்குகளின் உடல்களை முறைப்படி மற்றும் கண்ணியமான முறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்ற விதிகள் உள்ள நிலையில், துப்புரவுப் பணியாளர்களின் இந்த அநாகரிகமான மற்றும் பொறுப்பற்ற செயல் நிர்வாகத்தின் அலட்சியத்தைப் பறைசாற்றுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி தேசிய அளவில் பேசுபொருளாக மாறியதை அடுத்து, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விலங்குகளின் உரிமைகளுக்காகப் போராடும் அமைப்புகள் இந்தச் சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இதுபோன்ற மனிதநேயமற்ற செயல்கள் இனிமேல் எங்கும் நிகழாவண்ணம் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
