நியூசிலாந்தில் உயர் கல்வி படித்து வரும் புனேவைச் சேர்ந்த ஸ்ரேயா குப்தே என்ற மாணவியின் கார், பல்கலைக்கழகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தபோது அங்கிருந்த ஒரு பேருந்து அதன் மீது மோதி விபத்துக்குள்ளானது. பொதுவாக இதுபோன்ற விபத்துகளின் போது காரின் உரிமையாளர் அருகில் இல்லையென்றால் பலரும் அங்கிருந்து தப்பிச்செல்லவே நினைப்பார்கள்; ஆனால், இந்த பேருந்து ஓட்டுநர் செய்த நேர்மையான செயல் அந்த மாணவியின் மனதை மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூக வலைத்தளவாசிகளின் நெஞ்சங்களையும் நெகிழ வைத்துள்ளது.

மாலையில் கல்லூரி முடிந்து காரின் அருகே வந்த ஸ்ரேயா, காரின் முன் கண்ணாடியில் ஒரு சிறிய காகிதக் குறிப்பு இருப்பதைக் கண்டு, யாரோ காரை இடித்துவிட்டு தப்பிவிட்டார்களோ என்று பயந்துள்ளார். ஆனால், அந்த ஓட்டுநர் பயந்து ஓடாமல், விபத்திற்குப் பொறுப்பேற்று தனது நேர்மையை நிரூபிக்கும் வகையில் எழுதியிருந்த அந்த குறிப்பைப் படித்ததும், வியந்துபோன மாணவி அதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

சமூக வலைத்தளங்களில் விபத்துக்கள் தொடர்பான பல்வேறு பதைபதைக்க வைக்கும் வீடியோக்கள் தினந்தோறும் வைரலாகி வரும் நிலையில், இந்த வீடியோ முற்றிலும் மாறுபட்ட ஒரு மனிதநேயப் பதிவாக மாறியுள்ளது. வாகன ஓட்டிகளின் கவனக்குறைவாலோ அல்லது கட்டுப்பாட்டை இழப்பதாலோ சாலைகளில் நடக்கும் விபத்துகளில் சிக்கியவர்களுக்கு உதவாமல் பலர் ஓடிவிடும் இந்த காலத்தில், ஓடும் காரில் மட்டுமின்றி நிறுத்தப்பட்டிருக்கும் காரினாலும் ஆபத்து நேரிடலாம் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. தவறு செய்த பிறகும் அதனை மறைக்காமல் அந்த பேருந்து ஓட்டுநர் காட்டிய பொறுப்புணர்வும், நேர்மையும் ‘shreeya_gupte21’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டு தற்பொழுது இணையத்தில் புயலைக் கிளப்பி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.