திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய குடியிருப்புப் பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் அரை நிர்வாணமாக, முகங்களில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் வீடுகளின் வாசல்களிலும், தெருக்களிலும் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரியும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இரவு நேரங்களில் பொதுமக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில், வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளின் அருகே இந்த மர்ம நபர்கள் அத்துமீறி நடமாடுவதை விவரிக்கும் இந்தத் திகில் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பகுதிகள் என்று தெரிந்தே, எதற்கும் அஞ்சாமல் இந்த கும்பல் வலம் வருவது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்டுள்ள மாபெரும் சவாலாகப் பார்க்கப்படும் நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் அந்தப் பகுதிகளில் இரவு நேர ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
View this post on Instagram
ய”>
மேலும், சமூக வலைதளங்களில் பரவி வரும் சிசிடிவி காட்சிகளின் உள்கட்டமைப்பை ஆராய்ந்து, முகமூடி அணிந்திருக்கும் அந்த மர்ம நபர்கள் யார், அவர்கள் ஏதேனும் பெரும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுவதற்காக நோட்டமிடுகிறார்களா அல்லது ஏதேனும் சைக்கோ கும்பலா என்ற கோணத்தில் மர்ம நபர்களைக் கண்டறியும் பணியைப் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
