திருப்பூர் ரோட்டரி சார்பில் கடந்த 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பாசறை என்ற நிகழ்ச்சி ஏவிபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்த நிலையில் எம்எல்ஏக்களான சத்தியபாமா, பாலமுருகன், கவிஞர் வைரமுத்து, பாடலாசிரியர் விஜய், நடிகை நமீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்கள் நடைபெற்ற நிலையில் இறுதி நாளன்று தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி நீதி ராஜன் என்பவருக்கு சொந்தமான சொர்க்கம் பார்ட்டி ஹாலில் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மது விருந்துடன் நடைபெற்ற இந்த பார்ட்டியின் போது கேரளா மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களிலிருந்து வந்த பெண்கள் அரைகுறை ஆடையில் ஆபாச நடனம் ஆடினர். இதனை ஒருவர் முகநூலில் நேரலையில் ஒளிபரப்ப உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் நீதி ராஜனிடம் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..