ஆட்டோ டிரைவர் ஒருவரின் தொழில்முறை அணுகுமுறை, சமூக வலைதளங்களில் பலரையும் ஆச்சரியத்திலும் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. நிஷ்டா ஷெட்டி என்ற பயணி, தான் பயணித்த ஆட்டோவிற்கு கூகுள் பே மூலம் பணம் செலுத்த முயன்றபோது, தொழில்நுட்பக் கோளாறால் அந்தப் பணப்பரிமாற்றம் தோல்வியடைந்தது.

இது குறித்து அவர் இந்தி மொழியில் மெசேஜ் அனுப்பியபோது, அந்த ஆட்டோ டிரைவர் மிகத் தெளிவாகவும், ஒரு கார்ப்பரேட் நிறுவன அதிகாரி போல முறையான மொழியிலும் பதில் அனுப்பியுள்ளார். “நீங்கள் திரும்ப ஆட்டோவில் வருவது போல் இருந்தால் சொல்லுங்கள், அப்போது பணத்தை நேரில் பெற்றுக்கொள்கிறேன்” என்று அவர் அனுப்பிய அந்தப் பதில், நிஷ்டாவை வியப்பில் ஆழ்த்தியது.

அந்த டிரைவரின் பேச்சும், இறுதியில் அவர் அனுப்பிய “Noted” என்ற வார்த்தையும், பல அலுவலக மின்னஞ்சல்களை விட மிக நேர்த்தியாக இருந்ததாக நிஷ்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த டிரைவரின் தொழில்முறை அணுகுமுறையைக் கண்டு மிரண்டு போன நிஷ்டா, தானும் அவருக்கு ஆங்கிலத்திலேயே பதில் அனுப்பியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Nishta🌸 (@shettynishta)

“>

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், “அந்த ஆட்டோ டிரைவருக்கு லிங்க்டு-இன் கணக்கு தேவை”, “கார்ப்பரேட் ஊழியர்களை விட இவருக்கு நல்ல தகவல் தொடர்புத் திறன் இருக்கிறது” எனப் பலரும் நகைச்சுவையாகவும் பாராட்டியும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.