“திமுகவினர் தேர்தலுக்குத் தயாராக இருக்கணும்னு அவங்க தலைவரா அப்படிப் பேசுறது ஒரு எதிர்க்கட்சியோட சாதாரண செயல்பாடாகத்தான் இருக்கும், அதைப்பத்தி நாங்க கவலைப்படல; ஏன்னா பட்டிதொட்டி எங்கும் கிரவுண்ட் லெவல்ல ஊழல் 100% கம்மி ஆயிடுச்சுன்னு மக்கள் சொல்றாங்க, இது சாமானியர்களின் அரசாங்கம் என்பதால் அவ்வளவு சீக்கிரமா இதை யாராலும் கவுத்திட முடியாது!”
என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

தவெக அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்றும், திமுகவினர் தேர்தலுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதற்குச் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்த சசிகாந்த் செந்தில், தற்போதைய தலைமைச் செயலகத்தைப் பார்க்கும் போதே இது மக்களின் அரசாங்கம் என்று தெரிகிறது எனவும், 100 சதவீத ஊழலற்ற ஆட்சியைத் தந்து வரும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசை எளிதில் அசைக்க முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.
