“பிள்ளைகள் நமது வார்த்தைகளில் இருந்து கற்றுக்கொள்வதில்லை; மாறாக நமது அன்றாட நடத்தைகளில் இருந்து தான் எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறார்கள்” என்ற விழிப்புணர்வுச் சிந்தனை தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதற்குச் சான்றாக இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், சுற்றுலாப் பயணியிடம் இருந்த மொபைல் போனை குட்டி குரங்கு ஒன்று பிடுங்க சென்றது. உடனே அதைத் தடுத்த தாய் குரங்கு, அந்தப் போனைத் தன் கையில் வாங்கி சுற்றுலாப் பயணியிடம் மிக அன்பாகத் திருப்பிக் கொடுக்கிறது.

தன் தாயின் இந்த நல்ல ஒழுக்கத்தை அந்த இடத்திலேயே குட்டி குரங்கும் உற்றுப் பார்த்துப் பழகுகிறது. “வாயில்லா ஜீவனான ஒரு தாய் குரங்கு, அடுத்தவர் பொருளைப் பிடுங்கக் கூடாது என்பதையும்  மொபைல் போனை குழந்தைகள் உபயோகிக்க கூடாது   என்பதையும் தன் குட்டிக்கு வார்த்தைகளின்றிச் செயலில் காட்டிக் கற்றுக்கொடுக்கிறது.

 

“>

ஆனால், பகுத்தறிவு கொண்ட மனிதர்களாகிய நாமோ பிள்ளைகள் முன்னிலையில் எப்படி நடந்து கொள்கிறோம்?” என்று பெற்றோர்களைச் சுயபரிசோதனை செய்ய வைக்கும் வகையில் இந்த வீடியோ நெட்டிசன்களிடையே தீயாய் பகிரப்பட்டு வருகிறது.