கொல்கத்தாவில் மேற்கு வங்கம் பாஜக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தடுத்து பலத்த அதிர்ச்சிகள் ஏற்பட்டு வருகின்றன.

இது குறித்து அக்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதோடு, சில எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள் மீது தொடர் சட்ட நடவடிக்கைகள் பாய்ந்து வருகின்றன. இந்த அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரின் வீட்டில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதோடு போலீஸாரால் நடத்தப்பட்ட இந்த சோதனையின் போது, அந்த அரசியல் பிரமுகரின் வீட்டில் தங்க வளையல்களின் குவியல்கள், விலைமதிப்பற்ற நெக்லஸ்கள் என கட்டுக்கடங்காத அளவில் நகைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த விவகாரம் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் இவ்வளவு பெரிய தொகையிலான தங்கம் அந்த அரசியல் தலைவரின் சட்டவிரோத வருமானத்தின் மூலம் சம்பாதிக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீஸார் மற்றும் விசாரணை அமைப்புகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த அதிரடி பறிமுதல் சம்பவம் மேற்கு வங்க அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.