தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து மக்களை மகிழ்வித்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன், தற்போது சர்க்கரை நோய் பாதிப்பு காரணமாகத் தனது கால் விரல்களை இழந்து, தங்குவதற்குச் சொந்தமாக இடம் கூட இல்லாமல் மிகவும் வறுமையில் தவித்து வந்தார். சாப்பாட்டிற்கும் மருத்துவச் செலவிற்கும் வழியின்றி அவர் தவித்து வரும் செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
கால் விரல்களை இழந்து தங்க இடம் இல்லாமல் தவிக்கும் நடிகர் பாவா லட்சுமணனுக்கு ரூ.2 லட்சம் கொடுத்து உதவிய லெஜண்ட் சரவணா!
Coolsuresh | Lengend saravana | 22 June 2026#NewsTamil24x7 #Actorbhavalakshmanan pic.twitter.com/2L7G9XfeM9
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) June 22, 2026
இந்தத் தகவலை அறிந்த பிரபல தொழிலதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன், உடனடியாக பாவா லட்சுமணனின் துயர் துடைக்க நேசக் கரம் நீட்டியுள்ளார். அவரது அவசர மருத்துவ மற்றும் வாழ்வாதாரச் செலவுகளுக்காக ரூ.2 லட்சம் நிதியுதவியை உடனடியாக வழங்கியுள்ளார். கால் விரல்களை இழந்து தங்க இடமின்றி தவித்த ஒரு மூத்த கலைஞனுக்கு, லெஜண்ட் சரவணன் தேடி வந்து செய்துள்ள இந்த மனிதாபிமான உதவி தற்போது திரையுலகினரிடமும் பொதுமக்களிடமும் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
