சீனாவில் திருமணத் தகவல் மையம் ஒன்றின் மூலம் ஒரு நபருக்குத் துரிதமாகத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. விரைவான நிச்சயம், உடனடித் திருமணம் என்ற பழமொழிக்கு ஏற்ப அந்த நபருக்குத் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, அந்தப் பந்தம் விவாகரத்து நிலைக்குச் சென்றுள்ளது.

இதனால் திருமணமான ஒன்பதாவது நாளே மணமகள் நீதிமன்றப் படிகேறி மணமகன் மீது வழக்கும் தொடர்ந்துள்ளார். இந்தத் துரித திருமண முறையாலும், அதன் பின் நடந்த நீதிமன்ற வழக்கினாலும் அந்த மணமகன் சுமார் 36 லட்சம் ரூபாயை இழந்துவிட்டு தற்போது செய்வதறியாது கண்ணீர் வடித்து வருகிறார்.

இணையத்தில் வைரலாகப் பரவி வரும் இந்தச் சம்பவம், மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியதோடு பல்வேறு விதமான கருத்துக்களையும் பெற்று வருகிறது. ஆசை ஆசையாய் குடும்பம் நடத்த வந்த இடத்தில், பணத்தையும் இழந்து, மானத்தையும் இழந்து, வாழ்க்கையே பறிபோன விரக்தியில் அந்த வாலிபர் கண்ணீர் வடிப்பது பார்ப்போரைக் கலங்கச் செய்துள்ளது.