டெல்லி மெட்ரோ ரயிலில் காதலர்கள் ரீல்ஸ் செய்வதும், காதல் லீலைகளில் ஈடுபடுவதும் போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இந்த முறை டெல்லி மெட்ரோ ரயிலில் மனிதர்களை மிஞ்சும் வகையில் குரங்கு ஒன்று செய்த அட்ராசிட்டிட்டி இணையவாசிகளையே அதிர வைத்துள்ளது. மெட்ரோ ரயிலுக்குள் தன்னிச்சையாக நுழைந்த குரங்கு ஒன்று, அங்குள்ள பயணிகளுக்கு இடையே மிகக் கெத்தாக வலம் வந்துள்ளது. சிறிது நேரத்தில் அங்கு அமர்ந்திருந்த ஒரு இளம்பெண்ணின் அருகில் சென்ற அந்த குரங்கு, திடீரென அவரது மடியில் சென்று அமர்ந்து கொண்டது.
दिल्ली मेट्रो की पिंक लाइन (सराय काले खां स्टेशन) पर आज गजब ही हो गया! 🚊🐒
एक ‘बंदर भाई’ बिना टिकट फुल स्वैग में सफर कर रहे थे। हद तो तब हो गई जब वो सीधे एक लड़की की गोद में जा बैठे और उसे ‘किस’ (Kiss) भी कर दिया!
सहयात्री डर के साए में सफर करने को मजबूर थे।मनोरंजन अपनी जगह… pic.twitter.com/3kQdeDgqoS
— KK Delhi (@Surya102m) June 19, 2026
இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் பயந்துபோய் குரங்கைத் தள்ளிவிட முயன்றார். ஆனால், அந்த இடத்தை விட்டு நகர மறுத்த குரங்கு, அந்தப் பெண்ணின் முகத்திற்கு அருகில் சென்று திடீரென அவருக்கு முத்தம் (Kiss) கொடுத்தது. இந்த விநோதக் காட்சியைக் கண்ட சக பயணிகள் சிலர் சிரிப்பொலி எழுப்பியதுடன், தங்கள் மொபைல் போன்களில் வீடியோவாகப் பதிவு செய்யத் தொடங்கினர். அதே சமயம், சில பயணிகள் பயத்தின் காரணமாகத் தங்களது இருக்கைகளை விட்டு எழுந்து ஓடினர். சூர்யா (@Surya102m) என்ற எக்ஸ் பயனர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ தற்போது 50 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து வைரலாகி வரும் வேளையில், மெட்ரோ ரயிலின் பாதுகாப்பு குறைபாடு குறித்தும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
