கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பேருந்து நிலையத்தில், பேருந்துக்காகக் காத்திருந்த பெண்ணொருவரிடம் இருந்து மர்ம நபர் ஒருவர் மொபைல் போனைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியோடிய துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து நிலையத்திற்குத் தனது சொந்த வேலை காரணமாக வந்த அந்தப் பெண், உரிய பேருந்துக்காகப் பயணிகள் நிழற்குடையில் காத்துக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், பெண்ணின் கவனத்தை திசை திருப்பி, அவர் கையில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை நொடிப்பொழுதில் பறித்துக்கொண்டு கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் “திருடன்.. திருடன்..” என சத்தமிட்டதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் ஓடி வருவதற்குள் அந்த நபர் மாயமாகியுள்ளார்.
திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடமிருந்து செல்போனைப் பறித்து ஓடிய நபர்#Kallakurichi | #Theft | #Busstand pic.twitter.com/t4UVoToKRu
— PttvOnlinenews (@PttvNewsX) June 20, 2026
“>
இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் தற்பொழுது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதை அடுத்து, போலீஸார் பேருந்து நிலையப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்து, தப்பியோடிய செல்போன் கொள்ளையனை வலைவீசித் தேடி வருகின்றனர்.
