சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுமையாக நேரலை செய்யப்படாதது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரவைக்குள் நேரலை ஒளிபரப்பாகிறது என்ற நம்பிக்கையில்தான் தாம் நீண்ட நேரம் உரையாற்றியதாகக் குறிப்பிட்டார்.

ஆனால், வெளியில் வந்த பிறகே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேரலை துண்டிக்கப்பட்டது தனக்கே தெரியவந்தது என்றார். மேலும், பேரவை நிகழ்வுகள் அனைத்தும் மக்களுக்கு முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்பதே தங்களின் நிலைப்பாடு என்றும், இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பேசி எஞ்சிய நாட்கள் அனைத்தும் தடையின்றி நேரலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.