​தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகளின் நேரலை திடீரென நிறுத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சட்டமன்ற நிகழ்வுகளையும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளையும் மக்களுக்குக் கொண்டு சேர்க்காமல் நேரலையைத் துண்டிப்பது, சட்டமன்றத்தையும் அங்குள்ள உறுப்பினர்களையும் ஒட்டுமொத்தமாக அவமானப்படுத்தும் ஒரு செயலாகவே கருத்தப்படும் என்று சாடினார்.

​மேலும், ஜனநாயகத்தின் முக்கிய தூணாக விளங்கும் ஊடகங்களுக்குச் செய்திகளை வழங்க மறுப்பதும், அவையின் முழுமையான விவாதங்களை மறைத்து அரைகுறை செய்திகளை மட்டும் வெளியிடுவதும் பாசிச நடவடிக்கையாகும் என்று அவர் விமர்சித்தார். எனவே, சட்டமன்ற அவையின் ஜனநாயகப் பண்புகளைப் பாதுகாக்கும் வகையில், சபாநாயகர் தனக்குரிய தனி அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவை நிகழ்வுகள் அனைத்தையும் எவ்வித தடையுமின்றி முழுமையாக நேரலை செய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.