19 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்து, அவரது நெஞ்சின் மீது ஏறி நடனமாடியதாகக் கூறப்படும் ‘புஷ்பா’ என்ற மாஓயிஸ்ட் பெண் கமாண்டர் சகுந்தலா மஹதோ இறுதியாக போலீசாரிடம் சரணடைந்துள்ளார்.
மேலும் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த இவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்குப் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டிருந்தது. நீண்ட தேடுதலுக்குப் பிறகு, 19 ஆண்டுகள் கழித்து தற்போது அவர் காவல்துறையினரிடம் தனது ஆயுதங்களை ஒப்படைத்து மண்டியிட்டுள்ளார்.
இந்த கொடூரமான கொலைச் சம்பவம் மற்றும் அவரது நீண்ட கால தலைமறைவு வாழ்க்கை முடிவுக்கு வந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை ஆண்டுகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து வந்த ஒரு தேடப்படும் குற்றவாளி, போலீசாரின் தீவிர நடவடிக்கையால் தற்போது சரணடைந்திருப்பது பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த முக்கிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
