பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகர் சுனில் குரோவர், சாலையோரத்தில் உள்ள நடைபாதையில் தூங்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷார்ட்ஸ் மற்றும் டி-ஷர்ட் அணிந்தபடி, நடைபாதையில் துணி விரித்து மிகவும் சாதாரணமாக அவர் தூங்கும் இந்த வீடியோவை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவிற்கு பூமியில் நட்சத்திரங்கள் என்று அவர் தலைப்பிட்டுள்ளது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. ‘தி கபில் சர்மா ஷோ’ மூலம் பிரபலமான சுனில் குரோவர், நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், ‘ஜவான்’, ‘இந்தியா’, ‘கஜினி’ போன்ற பல முன்னணி திரைப்படங்களிலும் மிகச்சிறந்த கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sunil Grover (@whosunilgrover)

“>

சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் அவர், இது போன்ற விசித்திரமான மற்றும் சுவாரசியமான வீடியோக்களைப் பகிர்ந்து ரசிகர்களை மகிழ்விப்பது வழக்கம். சாதாரண மனிதர்களைப் போல அவர் நடைபாதையில் ஓய்வெடுக்கும் இந்த வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.