தென் கொரியாவில் பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில், ரோலர் கோஸ்டர் சவாரி செய்துகொண்டே ஒருவர் ஜூம் அலுவலகக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதிவேகமாகச் செல்லும் ரோலர் கோஸ்டரில் சுற்றிலும் மக்கள் அலறிக் கொண்டிருக்க, இந்த நபர் மட்டும் எந்தவித சலனமும் இன்றி தனது மடிக்கணினியைப் பார்த்தபடி மிக அமைதியாக மீட்டிங்கில் பங்கேற்பது காண்போரை ஆச்சரியப்பட வைக்கிறது.

இந்த வீடியோ எதார்த்தமானதா அல்லது விளம்பரத்திற்காக உருவாக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தாலும், அலுவலகக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் நிர்ப்பந்தத்தையும், ‘எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை செய்யலாம்’ என்ற தற்போதைய பணி கலாச்சாரத்தையும் இது நகைச்சுவையாகப் பிரதிபலிக்கிறது.

இந்த வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள், “இதுதான் உண்மையான வொர்க் ஃப்ரம் ரோலர் கோஸ்டர்”, “மீட்டிங்கில் கலந்து கொள்ளாவிட்டால் 16 மிஸ்டு கால்கள் வந்திருக்குமோ?” என விதவிதமான கமெண்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Unfolding Bharat | Latest News (@unfoldingbharat)

“>

மீட்டிங்கின்போது இவ்வளவு சத்தமான சூழலிலும், இணைய இணைப்பு துண்டிக்கப்படாமல் அவர் எப்படிச் சமாளித்தார் என்பது பலருக்கு வியப்பாக உள்ளது.

நவீன பணி கலாச்சாரத்தில் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டிய அழுத்தத்தை இந்த வீடியோ நகைச்சுவை கலந்து உணர்த்தினாலும், இணையத்தில் இது ஒரு சிறந்த பொழுதுபோக்குத் தருணமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.