இயக்குநர் பாரதிராஜா, தனது படமொன்றில் விஜய்யை நடிக்க வைக்க மறுத்துவிட்டதாக அவரே உருக்கமாகப் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எஸ்.ஏ. சந்திரசேகர் தனது மகன் விஜய்யை அழைத்து வந்து, பாரதிராஜாவின் கிராமத்து பாணி படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டபோது, பாரதிராஜா அந்தச் சமயத்தில் அந்தப் பையன் வேண்டாம் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால், அன்று தான் நிராகரித்த விஜய் இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நம்பர் 1 நாயகனாக உயர்ந்திருப்பது குறித்து பாரதிராஜா நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, பிற்காலத்தில் விஜய்யைச் சந்தித்தபோது, “நான் அன்று உன்னை வேண்டாம் என்று அனுப்பிவிட்டேன்” என்று பாரதிராஜா அவரிடமே வெளிப்படையாகக் கூறியுள்ளார். அதற்கு விஜய், “நீங்கள் என்னை அன்று நிராகரித்தது என் மனதில் இப்போதும் இருக்கிறது” என்று கூறியதாக அந்த வீடியோவில் பாரதிராஜா பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
“>
பல தசாப்தங்களுக்கு முன்பு நடந்த இந்தச் சம்பவத்தை விஜய் இன்றும் மறக்காமல் வைத்திருப்பது அவரது எளிமையையும், அந்தத் தருணத்தின் முக்கியத்துவத்தையும் உணர்த்துவதாக ரசிகர்கள் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
l
