தமிழக அரசியல் களம் தற்பொழுது டிஜிட்டல் மயமாகி வரும் வேளையில், நடிகர் விஜய் அவர்களின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எந்த ஒரு தொழில்நுட்ப உத்தியைப் பயன்படுத்தி வெற்றி பெற்றதோ, அதையே நாமும் பயன்படுத்தி வரும் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கட்சி நிர்வாகிகளுக்குப் புதிய அசைன்மென்ட் ஒன்றை அதிரடியாக வழங்கியுள்ளார்.

 சமூக வலைத்தளங்களின் முக்கியத்துவத்தைக் கட்சித் தொண்டர்களுக்கு விளக்கிப் பேசியுள்ள எடப்பாடியார், தற்போதைய திமுக அரசின் தவறுகளையும் மக்கள் சந்திக்கும் அவதிகளையும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் (Instagram Reels) மூலம் மிக எளிமையாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இளைய தலைமுறையினரைக் கவர தவெக கையாண்ட அதே ரீல்ஸ் ஃபார்முலாவை அதிமுகவும் கையில் எடுத்து, ஆளுங்கட்சிக்கு எதிராக டிஜிட்டல் யுத்தம் நடத்தத் தயாராகி வருவதை இபிஎஸ்ஸின் இந்த வார்த்தைகள் மிகத் தெளிவாகக் காட்டுகின்றன. அதிமுகவின் இந்த திடீர் சோசியல் மீடியா வியூகம்  தற்பொழுது நெட்டிசன்கள் மத்தியில் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு அசுர வேகத்தில் ட்ரெண்டாகி வருகிறது.