பாகிஸ்தானின் ராவல்பிண்டி பகுதியில் உள்ள நீதிமன்ற (ஜூடிஷியல் காம்ப்ளக்ஸ்) வளாகத்திற்குள், சட்டத்தைக் காக்க வேண்டிய வக்கீல்களே நீதிமன்றத்தை கிளப் போல மாற்றி, பெண் டான்ஸரை வரவழைத்து அசிங்கமான முறையில் டான்ஸ் பார்ட்டி நடத்தியுள்ள அதிர்ச்சித் தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உலகளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் உள்ள வக்கீல்களுக்கான பிரத்யேக அறையில் நள்ளிரவில் அரங்கேறிய இந்த ஆபாச நடனக் கொண்டாட்டத்தின் போது, அங்கிருந்த ஆண் மற்றும் பெண் வக்கீல்கள் பலரும் அந்த டான்ஸர் மீது நோட்டுகளை வாரி இறைத்துப் பணமழை பொழிந்து அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளனர்;
جوڈیشل کملپلیکس راولپنڈی میں رقص و سرور کی محفلوں کے انعقاد کا انکشاف۔کچہری کے احاطے میں قائم عمارت میں مجرا نائٹ کی ویڈیو سامنے آگئی۔جس میں رقص کے دوران نوٹ نچھاور کرتے دیکھا جاسکتا ہے۔ pic.twitter.com/amOxvU8cIo
— Latif Shah (@LatifShah27163) June 7, 2026
இந்த ஒட்டுமொத்தக் கூத்தையும் அங்கிருந்த சிலர் தங்களது மொபைல் போனில் ரகசியமாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் லீக் செய்ததால் இது காட்டுத்தீயாய் பரவி நெட்டிசன்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, நீதிமன்ற காவலாளி கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவில் லைன்ஸ் காவல் நிலைய போலீசார் நீதிமன்றத்தின் புனிதத்தைக் கெடுத்த இந்த வக்கீல் கும்பல் மீது அதிரடியாக வழக்குப் பதிவு (FIR) செய்துள்ளனர்.
வீடியோவில் அப்பட்டமாக முகம் தெரியும் அந்த வக்கீல்கள் மற்றும் அத்துமீறிய நபர்களை அடையாளம் கண்டு உடனடியாகக் கைது செய்யப் பாகிஸ்தான் போலீசார் தற்போது தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ள விபரம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
