ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் திறமைமிக்க மருத்துவர்கள், ஒரு வயது பெண் குழந்தைக்கு ஏற்பட்டிருந்த மிகவும் அரிய மற்றும் ஆபத்தான பிறவிக் குறைபாட்டைச் வெற்றிகரமாகச் சரிசெய்து அந்தப் பிஞ்சுக் குழந்தைக்குப் புதிய வாழ்க்கையைத் தந்துள்ளனர்.

அந்தப் பெண் குழந்தை பிறக்கும் போதே சிறுநீர் கழிப்பதற்கும், மலம் கழிப்பதற்கும் தனித்தனி வழிகள் இல்லாமல் “காமன் குளோகா” (Common Cloaca) என்ற விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டு, ஒரே ஒரு பொதுவான வெளிப்பக்க துளையுடன் பிறந்துள்ளது; அதுமட்டுமன்றி, மருத்துவ உலகையே அச்சுறுத்தும் வகையில் அந்தச் சிறுமிக்கு இரண்டு கர்ப்பப்பைகள், இரண்டு தனித்தனி பிறப்புறுப்புகள் மற்றும் பெரிய குடலில் ஒரு பெரிய வீக்கப் பை போன்ற அரிய சிக்கலான குறைபாடுகளும் சேர்ந்து இருந்துள்ளன.

சுமார் 50 ஆயிரம் பெண் குழந்தைகளில் ஏதோ ஒரு குழந்தைக்கு மட்டுமே வரக்கூடிய இந்த விசித்திரமான நோய்க்கு, ஏற்கனவே முதலுதவியாக ஒரு அவசரச் சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ஃபரிதாபாத்தில் உள்ள ‘அம்ரிதா’ மருத்துவமனையின் நிபுணர்கள் அதிநவீன எண்டோஸ்கோபி மற்றும் எம்.ஆர்.ஐ பரிசோதனைகள் மூலம் குழந்தையின் உள் உறுப்புகளைத் துல்லியமாக ஆய்வு செய்து மிகக் கடுமையான அறுவைச் சிகிச்சையைத் திட்டமிட்டனர்.

இந்த சவாலான ஆபரேஷனின் போது, மருத்துவர் நிதின் ஜெயின் மற்றும் ரிதிமா பாட்டியா தலைமையிலான மருத்துவக் குழுவினர், அந்தச் சிறுமிக்கு மலம் கழிப்பதற்கான புதிய ஆசன வாய், சிறுநீர் கழிப்பதற்கான தனி வழி மற்றும் பிறப்புறுப்பைப் பாதுகாப்பாகப் பிரித்துத் தனித்தனி பாதைகளை வெற்றிகரமாக உருவாக்கி அசத்தியுள்ளனர்;

இவ்வளவு சிறிய வயதில் இத்தனை பெரிய அறுவைச் சிகிச்சையைத் தாங்கி, அந்தப் பாப்பா தற்போது ஆரோக்கியமாகப் புது வாழ்வு பெற்றுள்ள விபரம் ஒட்டுமொத்த மருத்துவ உலகிலும் பெரும் சாதனையாகப் பார்க்கப்பட்டு, அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.