இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் புகழ் தற்போது இலங்கை மண்ணிலும் கொடிகட்டிப் பறக்கிறது. இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, இந்திய வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியே வந்தபோது, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் திலக் வர்மா போன்ற மூத்த வீரர்களைக் கடந்து, ரசிகர்கள் வைபவ் சூர்யவன்ஷியைச் சூழ்ந்து கொண்டு புகைப்படங்கள் எடுக்க ஆர்வம் காட்டினர். ர
சிகர்கள் கூட்டத்தை அவரே சமாதானப்படுத்தி, ஒவ்வொருவராகப் புகைப்படம் எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதல் போட்டியில் அவர் 14 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், அவரது துடிப்பான ஆட்டத்தால் ரசிகர்களின் மனதை அவர் வென்றுள்ளார்.
வெறும் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, தனது திறமையால் குறுகிய காலத்திலேயே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறார். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய மூத்தோர் அணியிலும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Vaibhav Suryavanshi has already become a superstar. After the match, the entire India A team was arriving, including Ruturaj, Tilak, Priyansh Arya, and other big names, but the fans were waiting for Vaibhav Suryavanshi to take pictures with him.🫡🔥
15-year-old boy, the new… pic.twitter.com/NcdWT8rEB6
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) June 9, 2026
“>
ஒருவேளை அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தால், இந்திய அணிக்காக மிக இளம் வயதில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஜூன் 11-ம் தேதி ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் அவர் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
