பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு (BMTC) சொந்தமான 290EN என்ற பஸ்ஸில் (KA-51 AJ-8905), தூங்குவது போல நடித்துப் பெண்ணின் துப்பட்டாவை இழுத்து அத்துமீறலில் ஈடுபட முயன்ற நபரின் செயல் கடும் கண்டனத்திற்குள்ளாகி வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் சற்றும் பயப்படாமல், பஸ்ஸில் இருந்தவர்கள் முன்னிலையில் அந்த நபரைச் சுட்டிக்காட்டி உரக்கக் கேட்டவுடன், 10 வினாடி கூட அங்கு நிற்க முடியாமல் அந்த நபர் பஸ்ஸை விட்டுத் தப்பி ஓடியுள்ளார்.
Yesterday, on a @BMTC_BENGALURU 290EN bus (KA-51 AJ-8905), a man thought he could get away with grabbing a woman's dupatta while pretending to be asleep. The moment she stood up and called him out in front of everyone, he didn't even stay for 10 seconds he ran away. What… pic.twitter.com/W0h8LphuBT
— Karnataka Portfolio (@karnatakaportf) June 10, 2026
இந்தச் சம்பவத்தில் அந்த நபர் செய்த அநாகரீகச் செயலை விட, சுற்றி இருந்த பயணிகள் பலரும் இதைப் பார்த்தும் கண்டுகொள்ளாமல் மவுனமாக இருந்தது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக பாதிக்கப்பட்டவர் வேதனை தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான இதுபோன்ற அத்துமீறல்களைக் கண்டும் மவுனமாக இருப்பது தவறு; பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாகப் பேசி அவர்களைக் கூண்டில் ஏற்ற வேண்டும். பெண்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்ய, சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் இத்தகைய அநாகரீகச் செயல்களைத் தட்டிக்கேட்க முன்வர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
