ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறவிருக்கும் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் இந்தியா கூட்டணி எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
“இந்தியா” கூட்டணி தொடங்கிய காலம் முதலே அதன் மையச் சக்தியாக திமுக இயங்கி வந்துள்ளதோடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாட்டு மக்களுக்கான முக்கியப் பிரச்சினைகளில் முதன்மைக் குரலாக ஒலித்து வந்துள்ளார். நீட் தேர்வு, தொகுதி மறுசீரமைப்பு, தேர்தல் நேரத்தில் அவசர அவசரமாகத் திணிக்கப்பட்ட SIR, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், ஒரே நாடு – ஒரே தேர்தல், வகுப்புச் சட்டம் மற்றும் FCRA சட்டத் திருத்தம் உள்ளிட்ட ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் மாநில உரிமைகளுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் திமுக ஆரம்பம் முதலே துணிச்சலுடன் எதிர்த்து நின்றுள்ளது என்பதை இக்கூட்டணியில் உள்ள பிற கட்சித் தலைவர்களும் நன்கு அறிவர் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த டெல்லி கூட்டத்தில் திமுக பங்கேற்காத போதிலும், இதில் கலந்துகொள்ளும் இதரக் கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும், அதற்காக திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று அந்த அறிவிப்பில் மிகத் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் உரிமைகளையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் நிலைநாட்டுவதில் திமுக என்றும் உறுதியோடு இருக்கும் என்பதை இந்த அறிவிப்பு மீண்டும் பறைசாற்றியுள்ளது
ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் “இந்தியா” கூட்டணிக் கூட்டத்தில், காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது!
அதே நேரத்தில் – இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளில், திராவிட முன்னேற்றக்… pic.twitter.com/JrEF2ibKsG
— DMK (@arivalayam) June 4, 2026
