தமிழக முதல்வர் விஜய் சமீபத்தில் திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது அதிமுகவை அல்லு சில்லுகள் என்றும் திமுக மற்றும் தவெக இடையே தான் போட்டி என்றும் கூறினார். இது அதிமுக தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் கேள்விகளையும் எழுப்பி வருகிறார்கள். அந்த வகையில் எம்பி இன்ப துரை தற்போது முதல்வர் விஜயிடம் பரபரப்பு கேள்வியை முன் வைத்துள்ளார்.

அதாவது முதலமைச்சர் ஆக பொறுப்பேற்ற பிறகு பாதுகாப்புக்காக போலீஸ் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இன்னும் விஜய் பவுன்சர்களுடன் சுற்றுவது ஏன்.? போலீஸ் பாதுகாப்பு மீது நம்பிக்கை இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அரசமைப்பை சாராத ஒருவர் முதல்வர் விஜயுடன் சுற்றுவது எப்படி என்றும் அதிகாரப்பூர்வ வளையத்திற்குள் அவர் எந்த விதிமுறையின் படி அதாவது பவுன்சர் அனுமதிக்கப்படுகிறார் என்றும் விளக்கம் கேட்டுள்ளார்.

மேலும் பாதுகாப்பு மற்றும் தகவல் பாதுகாப்பு தொடர்பான இந்த கேள்விகளுக்கு தமிழக அரசு கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும் என்றும் விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.