நிலவின் ரகசியங்களை உலகிற்கு அம்பலப்படுத்தும் வகையில், அதன் பள்ளங்களை மிகத் துல்லியமாகக் கண்டறிந்து ஆராய்வதற்காகப் புதிய அதிநவீன ஏஐ (AI) தொழில்நுட்பக் கருவி ஒன்றை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் (ISRO) ஆதரவுடன், ராஞ்சியில் உள்ள பிஐடி மெஸ்ரா (BIT Mesra) பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கி மாபெரும் சாதனை படைத்துள்ளனர்.

நிலவில் உள்ள விசித்திரப் பள்ளங்களின் வயது, அவற்றின் நீள அகலப் பரிமாணங்கள் போன்ற முக்கியத் தகவல்களை இந்த ஏஐ டூல் துல்லியமாக தெரிவிக்கும்  என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், எதிர்காலத்தில் நிலவிற்கு அனுப்பப்படும் விண்கலங்கள் மற்றும் ரோவர்கள் எவ்வித ஆபத்தும் இல்லாமல் பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்கு (Safe landing) உகந்த இடங்களைத் துல்லியமாகத் திட்டமிட இந்த  தொழில்நுட்பம் பெரிதும் கைகொடுக்கும் என விண்வெளி ஆய்வாளர்கள் பெருமிதத்தோடு கூறியுள்ளனர்.

விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் அடுத்த பாய்ச்சலாகப் பார்க்கப்படும் இந்த அதிரடி ஏஐ டூல் நியூஸ், தற்பொழுது சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் மத்தியில் காட்டுத்தீயாய் பரவி வைரலாகி வருகிறது.