மேற்கு வங்காள அரசியலில் திரிணாமூல் காங்கிரஸ் (TMC) மற்றும் பாஜக இடையே உச்சகட்ட மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் எம்பி அபிஷேக் பானர்ஜி சோனார்பூரில் தாக்கப்பட்ட விவகாரம் புதிய மருத்துவச் சர்ச்சையாக மாறியுள்ளது!

“அபிஷேக் பானர்ஜியை மருத்துவமனையில் அனுமதிக்க எந்தத் தேவையும் இல்லை” என பரிசோதனை செய்த டாக்டர்கள் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியிடம் திட்டவட்டமாகக் கூறி எழுத்துப்பூர்வ அறிக்கை கொடுத்ததாகவும், ஆனால் மம்தா தான் அவரை அட்மிட் செய்ய வற்புறுத்திவிட்டு அந்த ஆஸ்பத்திரி மீது ‘பாஜக பாசம்’ காட்டும் ஆஸ்பத்திரி என பாய்ந்ததாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு நடுவே கொதித்தெழுந்த டிஎம்சி மூத்த தலைவர் குணால் கோஷ், “திட்டமிட்டே ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முழக்கமிட்டு கற்கள், முட்டைகளால் அபிஷேக் மீது பாஜகவினர் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர்; அப்பல்லோ ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றபோது ட்ரீட்மெண்ட் தர வெளி அழுத்தங்கள் காரணமாக லேட் பண்ணாங்க, இப்போ பெல் வியூ ஆஸ்பத்திரி மேலயும் அட்மிஷன் விஷயத்துல பிரஷர் போடுறாங்க” என வெளுத்து வாங்கியுள்ளார்!

“>

 

காவல்துறையின் பாதுகாப்பு குளறுபடி குறித்தும் கேள்வி எழுப்பியுள்ள குணால் கோஷ், பத்திரிகையாளர்கள் மட்டும் காப்பாற்றவில்லை என்றால் விபரீதம் நடந்திருக்கும் என ஆவேசமாகப் பேசியிருப்பது பெங்கால் அரசியலைத் தீப்பிடிக்க வைத்துள்ளது!