2026 ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களம் இறங்கி, 237.31 என்ற அசுர ஸ்டிரைக் ரேட்டுடன் 776 ரன்களைக் குவித்து ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் 15 வயதே ஆன இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி.

அதுமட்டுமில்லாமல், ஒரே சீசனில் 72 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்லின் (59 சிக்ஸர்கள்) இமாலய சாதனையை அசால்ட்டாக முறியடித்து புது சரித்திரம் படைத்துள்ளார்!

மும்பையில் நடந்த கிரிக்கின்ஃபோ விழாவில் ’21 ஆம் நூற்றாண்டின் சிறந்த சர்வதேச ஆடவர் மட்டையாளர்’ விருதைப் பெற்ற கிரிக்கெட் காட் சச்சின் டெண்டுல்கர், இந்த இளம் சிங்கத்தின் ஆட்டத்தைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போயுள்ளார்.

“வைபவ் சூர்யவன்ஷி உண்மையிலேயே ஒரு தனித்துவமான சொத்து;  சூர்யவன்ஷியின் பேட்டிங்கில் மிகவும் கவர்ச்சிகரமான அம்சம் அவரது மணிக்கட்டு அசைவுகள்தான் என்று சச்சின் டெண்டுல்கர் கூறினார். டெண்டுல்கரின் கூற்றுப்படி, சூர்யவன்ஷி பந்தை வெறுமனே அடித்து ஆடுவதில்லை; அவர் மற்ற பெரும்பாலான வீரர்களை விட முன்னதாகவே பந்தின் திசையையும் நீளத்தையும் கணிக்கிறார்.மைதானத்தின் நாலாபுறமும் சிக்ஸர்களைப் பறக்கவிடுவது அற்புதம்” என்று சச்சின் உருகியுள்ளார்.

“>

 

மேலும், “கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி பந்து வரை பந்துவீச்சாளர்கள் கேள்வி கேட்டுக்கொண்டேதான் இருப்பார்கள், அதற்கு நாம் தான் தீர்வு காண வேண்டும்; வைபவ்விடம் ஏகப்பட்ட அறிவுரைகளைக் கூறி, பந்தைப் பார்த்து அவர் ரியாக்ட் செய்யும் இயல்பான உள்ளுணர்வை யாரும் கெடுத்துவிடக் கூடாது, அவரை சுதந்திரமாக ஆடவிட்டு பொறுமை காக்க வேண்டும்” என அட்வைஸ் செய்துள்ள சச்சின், காலப்போக்கில் டெஸ்ட் கிரிக்கெட் போன்ற சவால்களையும் அவர் தானாகவே கற்றுக்கொள்வார் என்று நெகிழ்ச்சியுடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்!