சவுதி அரேபியாவில் நடுரோட்டில் பெண் ஒருவர் செய்த அநாகரிகமான செயல் குறித்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொது வழியை மறித்து நின்ற அந்த சவுதி பெண், எதிரே வந்த கார் ஓட்டுநரை மிகக் கொடூரமான வார்த்தைகளால் திட்டி ஆக்ரோஷமாக சண்டையிட்டதோடு, எல்லையை மீறி அவரது காரின் மீது எச்சிலும் துப்பியுள்ளார். ஆனால், அந்த ஓட்டுநர் கோபப்பட்டு சண்டை போடாமல், அந்தப் பெண்ணின் அநாகரிக கூத்து முழுவதையும் தனது மொபைல் கேமராவில் மிக அமைதியாக வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

​இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணின் மோசமான நடத்தைக்கு எதிராக சோஷியல் மீடியாவில் கண்டனங்கள் குவிகிறது. வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “பொது இடத்தில் இப்படியொரு அநாகரிகமான முறையில் நடந்துகொள்ளும் இந்தப் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கக்கூடும்; இவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்” என விமர்சித்து வருகின்றனர். அதே வேளையில், பெண்ணின் ஆக்ரோஷமான தூண்டுதலுக்குப் பலியாகாமல், மிக அமைதியாக காட்சிகளை ஆவணப்படுத்திய கார் ஓட்டுநரின் பொறுமையை ஒட்டுமொத்த இணையமும் பாராட்டி வருகிறது.