தமிழ்நாட்டில் நிர்வாக நலன் கருதி சென்னை, அரியலூர், ராமநாதபுரம், பெரம்பலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய 5 முக்கிய மாவட்டங்களுக்குப் புதிய மாவட்ட ஆட்சித் தலைவர்களை (Collectors) நியமித்துத் தமிழக அரசு அதிரடியான மெகா உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி, சென்னை மாவட்ட புதிய கலெக்டராக மாலதி ஹெலன், அரியலூர் மாவட்ட புதிய கலெக்டராக மிருனாளினி, ராமநாதபுரம் மாவட்ட புதிய கலெக்டராக சிவகுரு பிரபாகரன், பெரம்பலூர் மாவட்ட புதிய கலெக்டராக சரண்யா அரி மற்றும் திருவள்ளூர் மாவட்ட புதிய கலெக்டராக கவிதா ஆகியோர் அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த 5 மாவட்ட புதிய கலெக்டர்கள் நியமனம் மட்டுமின்றி, தமிழக ஆளுநரின் முதன்மை செயலராகப் பணியாற்றி வந்த கிர்லோஷ் குமார் ஐஏஎஸ், தற்பொழுது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் முதன்மை செயலராக அதிரடியாக மாற்றப்பட்டு புதிய  பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அதிரடி ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்ற உத்தரவுச் செய்தி, தற்பொழுது கோட்டை வட்டாரத்திலும் சோசியல் மீடியாவிலும் காட்டுத்தீயாய் பரவி செம வைரலாகி வருகிறது.