மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று காலை முதலே குவிந்து வருகின்றனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படையான இக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி, நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் திடீரென மயங்கி விழுந்ததால் கோயில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்தவர்களை உடனடியாக மீட்ட கோயில் பணியாளர்கள் மற்றும் போலீஸார், அங்கிருந்த சிறப்பு மருத்துவ முகாம்களில் அனுமதித்து அவர்களுக்கு தீவிர முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மயங்கி விழுந்தவர்களை போலீசார் அழைத்து சென்று முதலுதவி அளித்து வருகின்றனர்#Thiruparankundram #MuruganTemple #VaikasiVisakam #Devotees #TempleFestival #NewsTamil24x7 pic.twitter.com/cpNgseQ4EC
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) May 30, 2026
இதற்கிடையே, வைகாசி விசாகத் திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று தெரிந்தும், மாவட்ட நிர்வாகமும் அறநிலையத்துறையும் போதிய பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளைச் செய்யவில்லை எனப் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இந்த நெரிசல் மற்றும் அசம்பாவிதங்களைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் கோயிலில் தற்காலிகமாகப் பாதுகாப்பும், அத்தியாவசிய வசதிகளும் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
