சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற, பழமையான தான்தோன்றீஸ்வரர் கோவிலில் முகூர்த்த நாளை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் ஒரே நாளில் நடைபெற்றுள்ளன. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான மணமக்கள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் கோவிலில் குவிந்ததால் அந்த இடமே மக்கள் கடலாகக் காட்சியளித்தது.
கோவில் வளாகத்தில் தங்களது வீட்டுத் திருமணத்தை நடத்துவதற்குக் கொஞ்சம் கூட இடம் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில், திருமணத்திற்கான இடத்தை பிடிப்பதில் மணமக்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு இடையே திடீரென பயங்கர வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டுள்ளது.
சேலம்: வாழப்பாடி அருகே மிகவும் பழமையான தான்தோன்றீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள்; திருமணத்திற்கு இடம் பிடிப்பதில் மணமக்களின் பெற்றோர்கள் உறவினர்கள் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு#Salem | #Temple | #Marriage | #Crowd | #Vazhapadi pic.twitter.com/vP9AMZEmdI
— PttvOnlinenews (@PttvNewsX) May 29, 2026
மங்களகரமான திருமண விழாவில், இடம் பிடிக்கும் சண்டையால் உறவினர்கள் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு மோதலில் ஈடுபட்ட சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
