தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை இன்னும் பலப்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டத்தின் தொடக்க விழா திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் இந்தத் திட்டத்தைத் தொடங்குவதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வந்தன.
நாளை நடைபெறவிருந்த இந்த முக்கிய விழாவில் முதலமைச்சர் விஜய் நேரில் கலந்துகொண்டு இந்தச் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தைத் தொடங்கி வைக்கவிருந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக இந்தத் தொடக்க விழா தற்போது திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசியல் மற்றும் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
