சென்னை வேளச்சேரியில் முதியவர் என்றும் பாராமல் மூதாட்டி ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மனிதாபிமானமற்ற கொடூரச் செயலில் ஈடுபட்ட இரண்டு வடமாநில நபர்களை, சற்றும் தாமதிக்காமல் வேளச்சேரி காவல்துறையினர் வெறும் 2 மணி நேரத்திற்குள் அதிரடியாகத் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்துள்ளனர். இந்த வக்கிர சம்பவத்தால் வேளச்சேரி பகுதி மக்கள் கடும் கொந்தளிப்பிலும், அதிர்ச்சியிலும் உறைந்துள்ளனர்.