தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வரும் நிலையில், மக்கள் வெயிலின் தாக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் துயர் துடைக்க தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) நிர்வாகிகள் அனைவரும் தங்களது பகுதிகளில் உடனடியாக நீர்மோர் பந்தல்களை அமைக்க வேண்டும் என்று அமைச்சரும், தவெக பொதுச்செயலாளருமான என்.ஆனந்த் அதிரடி அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இந்த நீர்மோர் பந்தல்கள் மூலமாகப் பொதுமக்களுக்குப் பழச்சாறு, இளநீர், மோர், குடிநீர், வெள்ளரிக்காய் மற்றும் நுங்கு உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களைத் தாராளமாக வழங்கி உதவ வேண்டும் என்று அவர் கட்சி நிர்வாகிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தவெக பொதுச்செயலாளரின் இந்த மக்கள் நலன் சார்ந்த அதிரடி உத்தரவு, கோடைக் காலத்தில் பொதுமக்களுக்குப் பெரும் நிம்மதியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.