சீன நிறுவனங்களின் கடும் போட்டி மற்றும் போதிய லாபம் இல்லாத காரணத்தால், LG நிறுவனம் தங்களது டிவி (TV) தயாரிப்பு மற்றும் விற்பனை வணிகத்தில் இருந்து முழுமையாக வெளியேறப் போவதாக அண்மையில் சில தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
ஆனால், இந்தத் தகவல் முற்றிலும் தவறானது என்று கூறி LG நிறுவனம் இதற்கு அதிரடி மறுப்பு தெரிவித்துள்ளது. தங்களது தொலைக்காட்சி வணிகத்தை விற்கவோ அல்லது மூடிவிட்டு வெளியேறவோ தற்போதைக்கு எந்தவொரு திட்டமும் இல்லை என்று அந்நிறுவனம் மிகத்தெளிவாக விளக்கம் அளித்துள்ளது.
இதன் மூலம், கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவில் உலா வந்த வதந்திகளுக்கு LG நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
