“கடவுளே நேர்ல வந்து வாழ்த்தினா எப்படி இருக்கும்.. அந்த மாதிரி ஒரு ஃபீலிங் தான் பா இது!” என்று கிரிக்கெட் உலகமே கொண்டாடும் வகையில், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் பாராட்டு மழையில் நனைந்து உருகிப்போயுள்ளார் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி!
ஐபிஎல் 2026 எலிமினேட்டர் மேட்ச்சில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்கு எதிராக 5 ஃபோர், 12 சிக்ஸர்களுடன் வெறும் 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்து ராஜஸ்தான் ராயல்ஸை குவாலிபையர் 2-க்கு தூக்கி நிறுத்திய வைபவ்வின் ஆட்டத்தைப் பார்த்து மிரண்டுபோன சச்சின், “தம்பியோட பேட் ஸ்விங் வேற லெவல், பிரண்ட் ஃபுட்டை யூஸ் பண்ணி அவன் கேப் கிரியேட் பண்ற விதம் அற்புதம்” என எக்ஸில் (X) உச்சி முகர்ந்து போஸ்டிங் போட்டிருந்தார்.
ஐபிஎல் வெளியிட்ட வீடியோவில் சக வீரர் துருவ் ஜூரெலிடம் இதுகுறித்து நெகிழ்ச்சியோடு பேசிய வைபவ், “சார்.. எனக்கு இந்த ட்வீட் பத்தி முதல்ல தெரியாது, நீங்க சொல்லிதான் தெரியும்; அவர்தான் கிரிக்கெட்டின் கடவுள், அவரே என்னை பாராட்டி ட்வீட் பண்ணியிருக்கார்னா அது எனக்கு மிகப்பெரிய பெருமை, இன்னும் நல்லா விளையாட இது எனக்கு செம மோட்டிவேஷன்” என மழலை மாறாமல் பேசியிருப்பது ரசிகர்களின் நெஞ்சங்களை அப்படியே உருக வைத்துள்ளது.
One brought the fireworks 🎇
The other ensured they didn’t stop 🤝🎥 Vaibhav Sooryavanshi & Dhruv Jurel on an 𝗲𝘃𝗲𝗻𝗶𝗻𝗴 𝘁𝗼 𝗿𝗲𝗺𝗲𝗺𝗯𝗲𝗿 in pink 🩷 🌟 – By @Moulinparikh and @ameyatilak #TATAIPL | #Eliminator | #TheFinalLeap | #SRHvRR | @rajasthanroyals…
— IndianPremierLeague (@IPL) May 28, 2026
“>
சச்சின் மட்டுமில்லாமல் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, இயான் பிஷப் என உலக ஜாம்பவான்கள் பலரும் “இந்திய கிரிக்கெட் இனி சேஃபான கைகளில் இருக்குப்பா” என வைபவ்வை கொண்டாடித் தீர்ப்பதால், இந்த குட்டி சிங்கத்தின் வைரல் ரியாக்ஷன் வீடியோ தான் இப்போ சோஷியல் மீடியாவின் அல்டிமேட் ட்ரெண்டிங்!
