“டேய் தம்பி.. என்னடா ஆட்டம் இது.. உனக்கு யாராச்சும் திஷ்டி சுத்திப் போட சொல்லுங்கப்பா!” என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வினே வியந்து போய், 15 வயது இளம் சூறாவளி வைபவ் சூர்யவன்ஷியின் பெற்றோருக்கு யூடியூபில் செம அட்வைஸ் கொடுத்துள்ளார்!
ஐபிஎல் 2026 எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்கு எதிராக வெறும் 29 பந்துகளில் 12 சிக்ஸர்களுடன் 97 ரன்கள் குவித்து, கிறிஸ் கெயிலின் அதிவேக 30 பந்து சத சாதனையை நூலிழையில் தவறவிட்டாலும், ஒட்டுமொத்த சீசனிலும் 65 சிக்ஸர்களுடன் கெயிலின் ஆல்-டைம் ரெக்கார்டை இந்த ‘பேபி மான்ஸ்டர்’ தவிடுபொடியாக்கியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், நடப்பு தொடரில் மொத்தம் 680 ரன்கள் குவித்து, சாய் சுதர்சன், ஷுப்மன் கில், விராட் கோலி ஆகியோரை பின்னுக்குத் தள்ளி மீண்டும் ‘ஆரஞ்சு கேப்பை’ தட்டிப் பறித்து டாப் கியரில் மாஸ் காட்டி வருகிறார். வைபவ்வின் இந்த அசாத்திய வளர்ச்சியைப் பார்த்து மிரண்டுபோன அஸ்வின், “15 வயசுல இந்த பையனுக்கு எப்படி இப்படி ஒரு முதிர்ச்சி வந்துச்சுன்னே தெரியல; சீசன் ஆரம்பத்துல அப்பர்கட் ஆடத் தெரியாம அவுட்டானவன், இப்போ அதே பந்தை அசால்ட்டா சிக்ஸருக்குப் பறக்கவிடுறான்;
இவன் சாதாரண ஆள் இல்ல, அவங்க அம்மா-அப்பா முதல்ல இவனுக்கு சுத்திப்போட்னும் கண்ணேறு-தீய பார்வையில் இருந்து பத்திரமா காப்பாத்தணும்” என்று நெகிழ்ச்சியோடு பேசியுள்ளார்.
சச்சினின் கமெண்டிற்கு வைபவ் ரியாக்ட் செய்த வீடியோ சோஷியல் மீடியாவில் நெஞ்சங்களை உருக வைத்து வரும் வேளையில், அஸ்வினின் இந்த ‘திஷ்டி’ அட்வைஸ் தான் இப்போ கிரிக்கெட் வட்டாரத்தின் பயங்கர ட்ரெண்டிங் டாக்!
