ஈரானின் முக்கிய துறைமுக நகரான பந்தர் அப்பாஸில் உள்ள ராணுவத்தளத்தின் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளதுடன், ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் பறந்த ஈரானின் 4 டிரோன்களையும் சுட்டு வீழ்த்தியுள்ளது.
கடந்த மூன்று நாட்களில் அமெரிக்கா நடத்தியுள்ள இரண்டாவது தாக்குதல் இதுவாகும்; எனினும், இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் தங்களது தற்காப்புக்காக மட்டுமே நடத்தப்பட்டதாக அமெரிக்கத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
