சமீபகாலமாகத் திருமணங்கள் மற்றும் பிறந்தநாள் விழாக்களில் எனப்படும் நெருப்புப் பொறிகளை உமிழும் துப்பாக்கிகள் மற்றும் புகை குண்டுகளைப் பயன்படுத்துவது புதிய ஃபேஷனாக மாறி வருகிறது.

ஆனால், இவற்றின் பாதுகாப்பு விதிகளை மக்கள் அலட்சியப்படுத்துவதால் ஏற்படும் விபத்துகள் பெரும் சோகத்தில் முடிகின்றன. அப்படியொரு அதிர்ச்சிகரமான சம்பவம் சிம்ரன் என்ற பெண்ணின் பிறந்தநாள் விழாவில் நடந்துள்ளது.

தனது பிறந்தநாளைக் கொண்டாடும் உற்சாகத்தில் சிம்ரன் கையில் ‘பயர் கன்’ எனப்படும் ஸ்பார்க்ளர் துப்பாக்கியை வைத்துக்கொண்டு நடனமாடினார். அவர் அதை ஆன் செய்த சில நொடிகளிலேயே, எதிர்பாராதவிதமாக அந்தத் துப்பாக்கி பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதனால் பாடலும் நடனமுமாக மகிழ்ச்சியாக இருந்த அந்த இடம், அடுத்த கணமே அலறல் சத்தத்தோடு பதற்றமாக மாறியது. இந்தத் திடீர் வெடி விபத்தால் சிம்ரனின் கழுத்து மற்றும் காதுப் பகுதிகள் பலத்த தீக்காயங்களுடன் மோசமாகப் பாதிக்கப்பட்டன; அவரது தலைமுடியிலும் தீப்பிடித்தது.

அதிர்ச்சியடைந்த உறவினர்களும் நண்பர்களும் உடனடியாக ஓடிவந்து தீயை அணைத்து, அவரைப் பத்திரமாக மீட்டதால் பெரிய உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பான வீடியோவையும், தனக்கு ஏற்பட்ட காயங்களையும் சிம்ரன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Simran (@simran.852001)

“>

பார்ட்டிகளில் தங்களின் கொண்டாட்டத்தை ஆடம்பரமாகக் காட்ட நினைப்பவர்கள், இதுபோன்ற ஆபத்தான உபகரணங்களைப் பயன்படுத்தும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.