“சி.வி.சண்முகம் இன்னும் எங்க கூடத்தான் இருக்காரு.. இன்னைக்கு சபாநாயகர்கிட்ட கொடுத்த லெட்டரை டிசைன் பண்ணி கொடுத்ததே அவர்தான்!” என்று அதிமுக மூத்த தலைவர் நத்தம் விஸ்வநாதன் கொளுத்திப் போட்டுள்ள  அரசியல் வெடி, தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக அதிமுக உள்கட்சிப் பூசலில் மிகப் பெரிய நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சி.வி.சண்முகம் கட்சி மாறப் போகிறார், அதிருப்தியில் இருக்கிறார் என கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட வதந்திகள் றெக்கை கட்டிப் பறந்தன.

இந்த அத்தனை வதந்திகளுக்கும் ஒரே போடாக முற்றுப்புள்ளி வைத்துள்ள நத்தம் விஸ்வநாதன், இன்று சபாநாயகரைச் சந்தித்துத் தாக்கல் செய்த முக்கியக் கடிதத்தின் பின்னணியில் சி.வி.சண்முகத்தின் ‘மாஸ்டர் பிரைன்’ இருந்ததை வெளிப்படையாக உடைத்துள்ளார்.

“அவர் எங்கேயும் போகல, எங்களோடுதான் பலமாக நிற்கிறார்” என்று அவர் நெஞ்சுயர்த்திப் பேசியிருப்பது, எடப்பாடி பழனிசாமி முகாமுக்கு பெரும் நிம்மதியையும், எதிர்த்தரப்புக்கு பலத்த அதிர்ச்சியையும் கொடுத்து, அடுத்தடுத்த அரசியல் மூவ்களுக்கான த்ரில்லரைக் கூட்டியுள்ளது!