கேரள அரசியல் களத்தையே மொத்தமாக உலுக்கும் வகையில், அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் இல்லத்தில் சோதனையை முடித்துவிட்டுத் திரும்பிய அமலாக்கத்துறை (ED) அதிகாரிகளின் வாகனத்தின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் நடத்தியுள்ள கொடூரத் தாக்குதல் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்துள்ளது. பினராயி விஜயன் வீட்டில் அதிரடியாக நுழைந்த அமலாக்கத்துறையினர், நீண்ட நேரமாகப் பரபரப்பான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த சோதனை முடிந்து அதிகாரிகள் தங்களது வாகனத்தில் கிளம்ப முற்பட்ட போது, அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் ஆவேசத்துடன் அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு வன்முறையில் இறங்கியுள்ளனர். ​நடுரோட்டில் அதிகாரிகளின் வாகனத்தை நாலாபுறமும் வழிமறித்த கம்யூனிஸ்ட் தொண்டர்கள், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறே கார் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தத் தொடங்கினர்.

தொண்டர்களின் இந்த திடீர் ருத்ரதாண்டவத்தால் காரின் கண்ணாடிகள் நொறுங்கி, அந்த இடமே போர்க்களமாக மாறியது. பினராயி விஜயன் வீட்டில் நடந்த இந்த அதிரடி சோதனையும், அதைத் தொடர்ந்து மத்திய புலனாய்வு அமைப்பு வாகனத்தின் மீதே நடத்தப்பட்ட இந்த மிரட்டல் தாக்குதலும் கேரளாவில் சட்டம் ஒழுங்கு குறித்த மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பி சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.