கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத்துறை நடத்திய அதிரடி சோதனையும், அதைத் தொடர்ந்து நடந்த வன்முறைச் சம்பவங்களும் இந்திய அளவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், தற்போது பினராயி விஜயன் ராகுல் காந்தியை நேரடியாகத் தாக்கிப் பேசியிருப்பது அரசியல் களத்தில் புதிய பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தன் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து மிகக் காரசாரமாகப் பேசிய பினராயி விஜயன், “ராகுல் காந்தியின் விருப்பம் இப்போது நிறைவேறிவிட்டது; என் வீட்டில் எப்போது சோதனை நடக்கும் என்று ராகுல் காந்தி போன்றவர்கள் நீண்ட காலமாக ஆவலோடு காத்துக்கொண்டிருந்தனர்” என அடுக்கடுக்கான பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து காங்கிரஸ் தரப்பிற்கு மரண ஷாக் கொடுத்துள்ளார்.
மேலும், இந்த அதிரடி சோதனையானது ஒரு சாதாரண சட்டப்பூர்வ விசாரணை கிடையாது என்றும், இதன் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் சதி ஒளிந்திருக்கிறது என்றும் அவர் போட்டுடைத்துள்ளார். மத்தியில் உள்ள ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும், சிபிஎம் (CPM) கட்சியை அச்சுறுத்தி முடக்குவதற்காகவும் மட்டுமே சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய முகமைகள் அப்பட்டமாகப் பயன்படுத்தப்படுகின்றன என அவர் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். பினராயி விஜயனின் இந்த ‘ராகுல் காந்தி’ டார்கெட் பேச்சும், மத்திய அரசுக்கு எதிரான ஆவேச முழக்கமும் சோசியல் மீடியாவில் தீயாய் பரவி, தேசிய அரசியலில் தற்போதைய மிக ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
