படிப்பு மற்றும் வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி, தனியாக ஹாஸ்டல் அல்லது அறைகளில் தங்கி இருக்கும் பிள்ளைகளுக்குத் தங்களது பெற்றோர், குறிப்பாக அம்மாவின் நினைவு அடிக்கடி வந்து போவது இயல்பு.

அப்படி வீட்டை விட்டுத் தூரமாய் இருக்கும் ஷாலினி என்ற இளம்பெண் ஒருவருக்கு, அவரது அம்மா வாட்ஸ்அப்பில் அனுப்பிய எமோஷனல் ஆடியோ (Voice Note) ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் லட்சக்கணக்கான நெட்டிசன்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Shalini Pathak (@slayaniiii)

வேலை மற்றும் படிப்புச் சுமையால் சரியாகத் தூங்காமல், இரவில் தனது மொபைல் போனை ஷாலினி ‘சலையண்டில்’ போட்டுவிட்டுத் தூங்கியுள்ளார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, அவரது அம்மா அனுப்பிய உருக்கமான வாய்ஸ் நோட் மெசேஜ் ஒன்று அதில் இருந்துள்ளது.

அதில், “அன்பே, எப்போதுமே உனது மொபைல் போனை சலையண்டில் வைக்காதே; எனக்கு உன்னுடைய நினைவு வந்து கொண்டே இருக்கிறது. எதற்கும் டென்ஷன் ஆகாமல் நன்றாகப் படி, மனதில் எதையும் போட்டுப் பூட்டி வைக்காதே. வாழ்க்கை மிகவும் கடினமாகத் தோன்றும்போது, நண்பர்களைச் சந்தித்துப் பேசு.

எப்போதும் நான் உன்னுடன் இருக்கிறேன்; உடம்பைப் பார்த்துக்கொள், ஒழுங்காக நேரத்திற்குச் சாப்பிடு. எந்தப் பெரிய பிரச்சினை வந்தாலும் முதலில் அம்மா, அப்பாவுக்கு கால் செய்; ஐ லவ் யூ” என்று அந்தத் தாய் தனது பாசத்தைக் கொட்டியுள்ளார்.

இந்த எமோஷனல் ஆடியோவை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (@slayaniiii) பகிர, அதைக் கேட்ட வீட்டை விட்டுத் தூரமாய் வாழும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், “இந்த ஆடியோவைக் கேட்கும்போது நேரில் வந்து அம்மா கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தது போல் நிம்மதியாக இருக்கிறது” என்றும், “அம்மாவுக்கு நிகர் உலகில் யாருமில்லை” என்றும் உருகிப் போய் கமெண்டுகளைக் குவித்து வருகின்றனர்.