தமிழகத்தில் டாஸ்மாக் காலி பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர் ஒருவர், புதிய அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று உருக்கமாகப் பேசியுள்ளார்.
“டாஸ்மாக்கில் நாங்கள் கொத்தடிமைகளாகவே வேலை பார்த்து வருகிறோம்; இதுவரை வாடிக்கையாளர்களிடம் 2 ரூபாய், 5 ரூபாய் வாங்கித்தான் வாழ்க்கையை ஓட்டி வந்தோம்.
ஆனால் இப்போது புதிய முதலமைச்சர் விஜய், கூடுதலாக 10 ரூபாய் வாங்கக் கூடாது என்று கூறிவிட்டதால் நாங்கள் வாங்குவதை நிறுத்திவிட்டோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்களுக்கு வெறும் 12 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்படுவதால் வீட்டு வாடகை, பெட்ரோல் செலவுக்கே அது சரியாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ள அவர், தங்களது வாழ்வில் பெரிய மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில்தான் 75 சதவீத டாஸ்மாக் ஊழியர்கள் விஜய் சாருக்கு ஓட்டுப் போட்டோம் என்றும், அதனால் தங்களுக்கு அவர் நல்லதொரு தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
