பாலிவுட் சினிமாவின் முன்னணி நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் ரன்பீர் கபூர் – ஆலியா பட் ஜோடி, தற்போது தங்களது பழைய வீட்டை வாடகைக்கு விட்டுள்ள செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மும்பையில் இருந்த தங்களது பழைய வீட்டை முழுமையாகப் புதுப்பித்த இந்த தம்பதி, அதனை மாதம் 11 லட்சம் ரூபாய் வாடகைக்கு, 5 ஆண்டுகள் குத்தகைக்கு விட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம் அவர்களுக்கு ஆண்டுக்கு 1.32 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கவுள்ளது. இதுமட்டுமன்றி, இன்னும் சில புதிய குடியிருப்புகளை வாங்கி வாடகைக்கு விடவும் இவர்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம், இந்த நட்சத்திர தம்பதி சுமார் 250 கோடி ரூபாய் பிரமாண்ட செலவில் கட்டப்பட்டுள்ள தங்களது புதிய சொகுசு பங்களாவிற்கு அண்மையில் குடியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலவரப்படி ரன்பீர் கபூர், நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணா’ படத்தில் ராமராக நடித்து வருகிறார். இதில் இவருடன் சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக நடிகர் யாஷும் நடித்து வருகின்றனர். அதேபோல் நடிகை ஆலியா பட்டும் அடுத்தடுத்து பல பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
